இராஜபாளையம் அருகே வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த நபர் கைது. லாட்டரி சீட்டுகள் பறிமுதல். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், தளவாய்புரம் அருகே உள்ள முகவூர் காமராஜர் சிலை அருகே இயங்கி வரும் டீ கடையில் வைத்து வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை வைத்து விற்பனை செய்வதாக தளவாய்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ஆய்வு நேரில் சென்று செய்தனர். ஆய்வில் முகவூரை சேர்ந்த கண்ணன் என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் கைப்பற்றிய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.