இராஜபாளையம்: மறைந்த முன்னாள் முதல்வருக்கு 8 வது நினைவு அஞ்சலி

85பார்த்தது
இராஜபாளையத்தில் அதிமுக கழக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெ. ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவுதினத்தினை முன்னிட்டு இராஜபாளையம், சாத்துார் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பாக இராஜபாளையம், சாத்துார் பகுதியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு வடக்கு அதிமுக நகர கழக செயலாளர் முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி