திருக்கோவிலூர் - Tirukoilur

திருக்கோவிலூர் பள்ளியில் 46ம் ஆண்டு விளையாட்டு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் உள்ள , ஸ்ரீ வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் 46வது ஆண்டு விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளியின் தாளாளர் சுனில் குமார் அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்வில் ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி அறக்கட்டளை தலைவர் மகாவீர்சந்த் மற்றும் விழுப்புரம் மத்திய மாவட்ட ஐஜேகே தலைவர், திருக்கோவிலூர் ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்து ஒலிம்பிக் ஜோதியை ஏற்றியும், குத்துவிளக்கு ஏற்றியும் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் திருக்கோவிலூர் ஸ்ரீ வித்யா மந்திரி கல்வி அறக்கட்டளை செயலாளர் லயன்ஸ் மதிவாணன், பொருளாளர் விமல் குமார், துணைச் செயலாளர் கவர்லால், அறக்கட்டளை உறுப்பினர்கள் ஏழுமலை, சஞ்ஜன், வழக்கறிஞர் நித்தேஷ், கார்த்திகேயன், திலீப்குமார், ரிங்குசுனில்குமார், பள்ளி முதல்வர் அருள், துணை முதல்வர் ஞானசேகரன், நிர்வாக அலுவலர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த விழாவில் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

வீடியோஸ்


விழுப்புரம்
செஞ்சி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபர் கைது
Nov 09, 2024, 16:11 IST/செஞ்சி
செஞ்சி

செஞ்சி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபர் கைது

Nov 09, 2024, 16:11 IST
விழுப்புரம் அருகே உள்ள கஸ்பா காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் வசந்தகுமார், (20); இவர், கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி தென்னந்தோப்பிற்கு காலை கடன் கழிக்க வந்த 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். அதே சிறுமி நேற்று முன்தினம் காலைக்கடன் கழிக்க வந்த போது மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். உடன் அங்கிருந்தவர்கள் சிறுமியை காப்பாற்றினர். இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து வசந்தகுமாரை கைது செய்தனர்.