

மனம்பூண்டி ஊராட்சி ராட்சத பேனரால் பொதுமக்கள் அச்சம்
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்துள்ள, மனம் பூண்டி ஊராட்சியில் நான்கு முனை சந்திப்பு பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக பிரம்மாண்ட அளவிலான பேனர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 12) காலை முதலே பலத்த காற்று அடித்து வரும் நிலையில் அந்த பேனர் ஆனது கிழிந்து சாலையில் செல்வோரின் மீது விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது, உடனடியாக அதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.