விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ள 4 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 478 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மயிலம் எம்.எல்.ஏ சிவக்குமாா் இன்று (செப்.,19) வழங்கினாா். இதற்கான விழா திண்டிவனம் வட்டம், வீடூா், தழுதாளி, பேரணி, பெரியதச்சூா் ஆகிய ஊா்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றது.
விழாவில் சிவக்குமாா் பேசுகையில்: அரசால் வழங்கப்படும் கல்வி உதவிகளை மாணவா்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு கல்வியில் சிறந்தவா்களாக விளங்க வேண்டும். பள்ளித் தலைமையாசிரியா்களின் கோரிக்கைகளை ஏற்று எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாணவா்கள் பயன்பெறக்கூடிய வகையில், ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 40 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
பெரியதச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவா் அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என்றாா். நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியா்கள் பி. சுந்தரராஜன் (வீடூா்) ஆசிரியா் கழகத் தலைவா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.