சிவன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது

68பார்த்தது
திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட கீழையூர் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமையான அட்டவீரட்டானங்களில் இரண்டாவது தலமாக உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் நேற்று காலை 6: 00 மணி முதல் 8 மணிக்குள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என முழங்கி வழிபட்டு சென்றனர். இந்த நிலையில், குடமுழுக்கு நன்னீராட்டு நிறைவை ஒட்டி இரவு ஸ்ரீசிவானந்தவல்லி சமேத வீரட்டேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண நிகழ்வை கண்டுகளித்தனர். திருக்கல்யாணத்தை ஒட்டி சிவானந்தவல்லி சமேத விரட்டேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அலங்கார தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அலங்கார தீபாவனை காண்பிக்கப்பட்ட போது பக்தர்கள் அனைவரும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என முழங்கி வழிபட்டு சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி