சாலை விரிவாக்கத்திற்கு மரங்களை வெட்ட எதிர்ப்பு

56பார்த்தது
சாலை விரிவாக்கத்திற்கு மரங்களை வெட்ட எதிர்ப்பு
அரகண்டநல்லுாரில் சாலை விரிவாக்கத்துக்கு பழமையான மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக ஆர்வலர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். இது குறித்து, விழுப்புரம் மாவட்ட சமூக ஆர்வலர்கள், பிரபு தலைமையில், நேற்று(செப்.17) விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்து அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம்-திருக்கோவிலுார் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில், அரகண்டநல்லுாருக்கு பகுதி அரசு பாலிடெக்னிக் கல்லுாரில் இருந்து, இருபுறமும் உள்ள சாலையோர மரங்களை, சாலை விரிவாக்கத்திற்காக வெட்டி வருகின்றனர். இதில், பழமை வாய்ந்த ஆலமரம், நாவல் மரம், வேப்ப மரம், புளிய மரங்களை அகற்றும் பணி, கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. 100 ஆண்டுகள் பழமையான ஆலமரமும் இருக்கிறது. இந்த ஆலமரம், அங்கிருக்கும் கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் நிழலுக்கான பயன்பாட்டில் உள்ளன. ஆலமரம் பல ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழக்கூடியவை.

பறவைகள், நுண்ணுயிர்களின் அடைக்கலமாகவும், நிறைய ஆக்சிஜன், நிறைய நிழல் தரக்கூடியதாகவும் இருக்கின்றன. இலைகள் முதல் வேர்கள் வரை மருத்துவ குணங்கள் நிறைந்தது. மழைபொழிவுக்கும் வழிவகை செய்கிறது. இந்த ஆலமரத்தை பாதுகாத்து, அங்கு பல வளர்ச்சி திட்டங்கள் வந்தாலும் மாற்று ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். குறைந்த பட்சம், இந்த மரத்தை வெட்டாமல் மாற்று ஏற்பாடு செய்ய வழிவகை செய்யுமாறு, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி