திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தென்பெண்ணையில் இருந்து தீர்த்த கலசம் கொண்டுவரப்பட்டு யாகசாலை பூஜை துவங்கியது.
திருக்கோவிலுார், கீழையூர் சிவானந்தவள்ளி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் அட்டவீரட்டானங்களில் இரண்டாவது தலமாக விளங்குகிறது. பாடல் பெற்ற பழமையான கோவில். புனரமைக்கப்பட்டு, வரும் 15ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக நேற்று (செப்.10) காலை 10: 30 மணிக்கு தென்பெண்ணையாற்றங் கரையில் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் கலசத்தில், யாகசாலை பூஜைக்கு மேள தாளம் முழங்க கொண்டு வரப்பட்டது. மாலை 6: 00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சோமகும்ப பூஜை, அங்குரார்ப்பணம், யாக வேள்வி சிவாச்சார்யார்கள் சிவரக் ஷாபந்தனம் நடந்தது. வரும் 15ம் தேதி காலை 6: 30 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் மூலஸ்தான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை, ஊர் முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.