திருக்கோவிலூர் - Tirukoilur

எல்லிஸ்சத்திரம் அணைக்கட்டில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலத்தில் ரூ. 86. 25 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் எல்லிஸ் சத்திரம் அணைக்கட்டினை நேரில் பார்வையிட்டு நேற்று(செப்.18) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு நடந்து வரும் இறுதிக்கட்ட பணிகள், அதில் விவசாயிகள் குறிப்பிட்ட சில குறைகளை நிவர்த்தி செய்யவும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார். இந்த ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உள்ளிட்ட முக்கிய துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

வீடியோஸ்


விழுப்புரம்
மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்.எல்.ஏ
Sep 19, 2024, 16:09 IST/மயிலம்
மயிலம்

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்.எல்.ஏ

Sep 19, 2024, 16:09 IST
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ள 4 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 478 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மயிலம் எம்.எல்.ஏ சிவக்குமாா் இன்று (செப்.,19) வழங்கினாா். இதற்கான விழா திண்டிவனம் வட்டம், வீடூா், தழுதாளி, பேரணி, பெரியதச்சூா் ஆகிய ஊா்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றது. விழாவில் சிவக்குமாா் பேசுகையில்: அரசால் வழங்கப்படும் கல்வி உதவிகளை மாணவா்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு கல்வியில் சிறந்தவா்களாக விளங்க வேண்டும். பள்ளித் தலைமையாசிரியா்களின் கோரிக்கைகளை ஏற்று எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாணவா்கள் பயன்பெறக்கூடிய வகையில், ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 40 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. பெரியதச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவா் அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என்றாா். நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியா்கள் பி. சுந்தரராஜன் (வீடூா்) ஆசிரியா் கழகத் தலைவா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.