
விக்கிரவாண்டி: மருந்தாளுனர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
விக்கிரவாண்டி சூர்யா பார்மசி கல்லுாரியில் மருந்தாளுனர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு, கல்லுாரி தலைமை நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் கல்லுாரி முதல்வர் டாக்டர் அன்பழகன் வரவேற்றார். பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோகனா திட்டத்தில் கற்றல் திறன் மேம்பாட்டிற்கான அங்கீகாரத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மருந்து கடை, சில்லரை மருந்தக மருந்தாளுனர்களுக்கான பயிற்சி துவங்கியது. பயிற்சியில் கடலுார் மண்டல மருந்து ஆய்வாளர் சுகன்யா, ஓய்வு பெற்ற மருந்தாளுனர் அலமேலு புஷ்பா, பயிற்சியாளர் டாக்டர் சத்யா பயிற்சி அளித்தனர். வரும் மார்ச் 28ம் தேதி வரை பயிற்சி முகாம் நடக்கிறது.