அதிகமான கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால் உடல் எடை அதிகரிக்க வழி வகுக்கும். பலாப்பழ ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில், பலாப்பழம் சாப்பிட்ட உடன் அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மேலும், சிறுநீரக மற்றும் இரத்த சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள் பலாப்பழத்தை தவிர்க்குமாறு உணவியல் நிபுணர்கள் பரிந்துரைப்பது குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சையின் போதும் மற்றும் அதற்கு பின்னும் பலாப்பழம் எடுத்துக்கொள்ளக்கூடாது.