விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்துள்ள, மணம்பூண்டி ஊராட்சியில், விழுப்புரம் மத்திய மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், குடியரசு தினத்தை ஒட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவரும், பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளருமான செந்தில்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். உடன் ஐஜேகே மாவட்ட துணைச் செயலாளர் குருமூர்த்தி, மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் சிதம்பரநாதன், மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.