விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே நரையூர் காலனி மேட்டு தெருவைத் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 29). கூலி தொழிலாளி. இவரது மனைவி சினேகா (24). திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அவர் சினேகாவை தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் வளவனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைக்கேல்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.