சத்தான அரிசிகளில் கருப்பு கவுனி அரிசி முதலிடம் பிடிப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் ஒரு கைப்பிடி அளவு கருப்பு கவுனி அரிசியை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராது. அதற்கு காரணம் இதில் இருக்கும் ஆந்தோசைனின்கள் என்கிற ஒரு வகையான வேதிப்பொருள் தான். இந்த ஆந்தோசைனின்கள் புற்றுநோய் செல்களை அழித்து உடலை பாதுகாக்கிறது. ஏற்கனவே புற்றுநோயின் பாதிப்பு தீவிரமாக இருப்பவர்களுக்கு இது பெரிய அளவில் பலனளிக்காது.