அசைவப் பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவில் சிக்கன் முதலிடம் வகிக்கிறது. சிக்கனின் பல பாகங்களை சாப்பிட்டாலும் அதன் தோல் பகுதியை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தோலில் ஊட்டச்சத்து என்பது சிறிதும் இல்லை. ஆனால் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் டன் கணக்கில் உள்ளன. சுருங்கச் சொன்னால் கோழியின் உடம்பில் முற்றிலும் பயனற்ற பாகம் என்றால் அது தோல்தான். தோலை முற்றிலும் தவிர்த்து விட்டு இறைச்சியை மட்டும் உண்ணுங்கள்.