விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி. இந்த பகுதியில் திருக்கோவிலூர் - திருவண்ணாமலை பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ளது துணிக்கடை இந்த கடையில் உடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், காலணிகள் ஆகியவற்றை வைத்து கடந்த 3 ஆண்டுகளாக விற்பனை செய்து செய்து வருகிறார் அதன் உரிமையாளர் திலக்.
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு இன்று காலை கடையை திறக்க வந்த பணியாளர்கள் கடையின் முன்பக்க ஷெட்டரின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து கடையின் உரிமையாளரான திலக்கிற்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடையில் இருந்து 7 ஜோடி ஷூக்களும், 10க்கும் மேற்பட்ட துணிகளும், கல்லாவில் இருந்த ரூபாய். 10 ஆயிரம் பணமும் திருடபட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது அதிகாலை 3 மணியளவில் கடையின் உள்ளே வந்த இரண்டு இளைஞர்கள் அங்கிருந்த துணிகள் மற்றும் செருப்புகளை எடுத்துச் செல்லும் காட்சி அதில் பதிவாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து, அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.