விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பெலாகுப்பம் ஊராட்சியில் பெலாகுப்பம், வேம்புண்டி, முட்டியூர் ஆகிய 3 கிராமங்களிலும் பெஞ்சால் புயல் தாக்குதலால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முட்டியூர் கிராமத்தில் உள்ள ஏரி நீர் பரப்பு பகுதி சுமார் 45 ஏக்கர் உள்ள நிலையில் 50 ஆண்டுகள் இல்லாத வகையில் ஏரி முற்றிலுமாக நிரம்பி கரையின் மீது கடந்து வெள்ள நீர் வழிந்து ஓடிய நிலையில் சுற்றுப்புறத்தில் உள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பெரும் வெள்ள சேதத்தில் மாட்டிக் கொண்டது.
இந்தநிலையில் பெலாகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் பூங்கா.பாக்யராஜ் பொது மக்களை பெலாகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திலும்,
வேம்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், ஊராட்சி மன்ற தலைவர் அவர்களின் தனி அலுவலகத்திலும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மக்களை பாதுகாப்பாக பத்திரப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து மக்களுக்கு உணவு, குடிநீர் கிராமம் கிராமங்களாக சென்று, வழங்கி வருகிறார்.
மேலும், வெள்ள நீர்களில் இருந்து மீண்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். இதனை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
பெஞ்சல் புயல் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.