பகுதிநேர வேலை தேடுபவர்களை குறிவைத்து சில மோசடிக் கும்பல்கள் களமிறங்கியுள்ளன. சமூக வலைதளங்கள் மூலம் பலரையும் அணுகும் இந்தக் கும்பல்கள் லிங்குகளை அனுப்பி கிளிக் செய்ய கூறுகின்றன. லிங்குகளைக் கிளிக் செய்த பின்னர் நமது மொபைலில் இணைக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது. இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சைபர் குற்றப் புகாரளிக்க https://cybercrime.gov.in/ என்ற இணையதளம் அல்லது 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளது.