விழுப்புரம் அருகே உள்ள வேடம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 65). இவருக்கு இன்னும் திருமண மாகவில்லை. ஒருகோடி கிராமத்தில் உள்ள அய்யனார் என்பவரின் வீட்டில் 6 மாதமாக தங்கியிருந்து வீட்டு வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர், அங்குள்ள கார் ஷெட்டில் இரும்புக்குழாயில் கயிற்றால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த தகவலின் பேரில் காணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்னத்தம்பியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.