விழுப்புரம் எஸ். ஐ. , க்கு மிரட்டல்: 3 பேர் கைது

50பார்த்தது
விழுப்புரம் காந்திசிலை அருகே, டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுபஆனந்த், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். பதிவெண் இல்லாமல் வந்த ஆட்டோவை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார். ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் சேர்ந்த னுார் ராம்குமார், 25; அவரது நண்பர்களான வி. மருதூர் ராஜசேகர், 46; நரசிங்கபுரம் மணிமாறன், 29; மகேந்திரன், 50; ஆகியோர் சேர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் சுபஆனந்தை திட்டி, மிரட்டல் விடுத்துள்ளனர். புகாரின் பேரில், 4 பேர் மீது வழக்குப் பதிந்து ராம்குமார், ராஜசேகர், மணிமாறன் ஆகிய மூவரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி