வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரே டூவீலரில் செல்போன் பேசியபடி வந்த இளைஞரை இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மடக்கியுள்ளார்.
அப்போது இளைஞரை இன்ஸ்பெக்டர் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இளைஞர் எதற்காக என்னை அடித்தீர்கள். நான் என்ன தவறு செய்தேன் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதை எடுத்து இன்ஸ்பெக்டர் இளைஞரை வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றார். இதனால் ஆட்சியர் அலுவலகம் இது பரபரப்பு ஏற்பட்டது.