
குடியாத்தத்தில் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் சஸ்பெண்ட்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி உதவி பொறியாளராக பணியாற்றி வந்த நிர்மல்குமார் கடந்த 7-ம் தேதி 30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிந்து கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆட்சியர் சுப்புலட்சுமி லஞ்சம் வாங்கி கைதான உதவி பொறியாளர் நிர்மல்குமாரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.