வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புகழ் பெற்ற கெங்கை அம்மன் கோவிலில் இலட்ச தீப பெரு விழா மற்றும் 1008 அஷ்டோத்திர அர்ச்சனை நடந்தது.
முன்னதாக மூலவர் கெங்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு மூலவர் கெங்கையம்மன் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் கோயில் வளாகத்தில் பிரம்மாண்ட விதவிதமான வண்ணமயமான கோலங்கள் அமைக்கப்பட்டு அதில் ஏராளமான பெண்கள் தீபங்களை ஏற்றினர்.
இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.