காட்பாடி: ஓய்வுபெற்று வந்த ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு

51பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள லத்தேரி கிராமத்தைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவர் பெங்களூரில் உள்ள மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் (MEG) பயிற்சிப் பள்ளியில் இந்திய ராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்து 30 ஆண்டு காலம் பணியாற்றி லெப்டினென்ட் வரை பதவி உயர்வு பெற்று இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று பெங்களூரில் இருந்து ரயில் மூலமாக காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி வந்த அவருக்கு அவருடன் பணியாற்றிய வேலூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

பிறகு சொந்த ஊர் லத்தேரிக்கு வந்த ராணுவ வீரருக்கு, அவருடைய கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மேளத்தாலங்களுடன் பட்டாசு வெடித்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்த ராணுவ வீரரை அவருடைய மனைவி கண்ணீருடன் கட்டி அணைத்து வரவேற்றபோது ராணுவ தொப்பியை மனைவிக்கு அணிவித்து ஆறுதல் கூறினார். அதைத்தொடர்ந்து அவருடைய அம்மாவுக்கும் தொப்பி அணிவித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

தொடர்புடைய செய்தி