
வேலூர்: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி, பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியான சுப்பிரமணி (63) அந்த சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி, அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.