குடியாத்தம்: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

78பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுண்ணாம்புப்பேட்டை பகுதியை சேர்ந்த தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

35 வது வார்டு செயலாளர் சுரேஷ் மற்றும் குடியாத்தம் தொகுதி மகளிர் அணி பொறுப்பாளர் சபிதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வந்து வழங்கினார். இதில் 300 பேருக்கு பிரியாணியும், 100 பேருக்கு காய்கறிகளும், சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களையும் வழங்கினர். 

இதில் தவெக மாவட்ட நிர்வாகி அழகப்பன் மற்றும் நகர நிர்வாகிகள் நகர் இளைஞர் அணி செயலாளர் ஆத்மகுமார் தாளையாத்தம் பாஸ்கர் விக்னேஷ், மற்றும் அர்ஜுன் மற்றும் 35 வது வார்டு தவெக நிர்வாகிகள் ராஜா, கணேசன், ஹரிபாபு, ஹரி உள்ளிட்ட தவேக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி