முதல்வர் பிறந்தநாள் பேனரில் எம்எல்ஏ முகம் கிழிப்பு

66பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம்

*திருப்பத்தூரில் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனரில் திமுக எம்எல்ஏ நல்லதம்பி முகம் கிழிப்பு போலீசார் விசாரணை. *

திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி திமுக கிளை கழகம் சார்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த பேனரில் உள்ள திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பியின் முகத்தை
மர்ம நபர்கள் கொடூரமாக முகத்தை கிழித்துள்ளனர்.

மாடப்பள்ளி திமுக கிளை செயலாளர் சங்கர் என்பவர் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் கூறியுள்ளதாவது மடப்ப்பள்ளி திமுக கிளை கழகம் சார்பில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்பேத்கர் சிலை அருகே முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட படம் அடங்கிய பேனரை வைத்திருந்தோம்

யாரோ மர்மநபர்கள் பேனரில் உள்ள திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரின் நல்லதம்பி புகைப்படத்தை தாறுமாறாக கிழித்துள்ளனர்

பேனரை கிழித்த மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி