அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தலைவர் பதவிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. 2020 ஆகஸ்டில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை 2021 ஜூலை மாதம் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலை 2021 சட்டமன்ற தேர்தலிலும், 2024 மக்களவை தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவியிருந்தார்.