மாடு விடும் திருவிழா - சீறிப்பாய்ந்த காளைகள்!

78பார்த்தது
வேலூர் மாவட்டம் ஏரிகுத்தி கிராமத்தில் மாடு விடும் திருவிழா இன்று நடைபெற்றது. முன்னதாக இக்கிராமத்தில் எருதுவிடும் சாலைகளில் மண் கொட்டி மண் சாலையாக வடிவமைக்கப்பட்டது.

அரசு வழிக்காடுதல் படி போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளை மாடுகளுக்கும் கால்நடை மருத்துவர் குழு மருத்துவ பரிசோதனை செய்த பின்பே மாடுகள் மஞ்சுவிரட்டில் அனுமதித்தனர்.

ஒரு எருது ஒரு சுற்று விடப்படும் அதில் அதிவேகமாக ஓடும் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதில் முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், 2. வது பரிசாக 80 ஆயிரம் ரூபாயும்,
3. வது பரிசுராக 60 ரூபாயும் மொத்தம் 50 பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எருது விடும் திருவிழாவில் வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது.

5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாடு விடும் திருவிழாவில் கலந்து கொண்டனர். மேலும் மாடு விடும் திருவிழாவில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி