கே.வி.குப்பத்தில் வட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம்

63பார்த்தது
கே.வி.குப்பத்தில் வட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம்
கே. வி. குப்பம் வட்டத்திற்கு உட்பட்ட, வருவாய் கிராமங்களில் கனிம விவரங்கள், பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக வட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம், தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. தாசில்தார் தே. முரளிதரன் தலைமை தாங்கினார். அனுமதியின்றி நடைபெறும் கனிம வளக்கொள்ளை குறித்த தகவலின்பேரில், துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏரிகளில், விவசாயப் பயன்பாட்டிற்காகக், களிமண் எடுக்க வழங்கப்படும் அனுமதியைக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி