வருடத்தில் பல நாட்கள் பல்வேறு சிறப்பு தினங்களாக கொண்டாடப்பட்டாலும் அவை எவற்றிற்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த ஏப்ரல்-1-க்கு உண்டு. அதாவது பெண்கள் தினத்தை பெண்களும், ஆண்கள் தினத்தை ஆண்களும், காதலர் தினத்தை காதலர்களும், குழந்தைகள் தினத்தை குழந்தைகளும், பெற்றோர்கள் தினத்தை பெற்றோர்களும் உரிமை கொண்டாடுவார்கள். ஆனால் இப்படி யாருமே உரிமை கொண்டாடாத ஒரு தினம் தான், இன்றைய ’முட்டாள்கள் தினம்’.