குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ தேர்வுக்கான அறிப்பாணையை டிஎன்பிஎஸ்சி இன்று (ஏப்.1) வெளியிட்டுள்ளது. அதன்படி வருவாய் கோட்டாட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், பதிவுத் துறை மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட 8 விதமான உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று குரூப் 1 ஏ முதல் நிலை தேர்வும் அதே நாளில் நடைபெறுகிறது. ஏப்ரல் மாதம் இறுதி வரை இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.