வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் அழகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி வேலன் (32). இவர் நேற்று இரவு அழகிரி நகர் பகுதியில் உள்ள மைதானத்தின் எதிரே சாலையோரம் அமர்ந்து மது அருந்தி வந்ததாகவும், அப்போது அடையாம் தெரியாத நபர்கள் கட்டிட மேஸ்திரி வேலனை கத்தியால் வெட்டி விட்டு சென்றதாகவும் பொதுமக்கள் சத்துவாச்சாரி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு அடுக்கம்பாறை பகுதியில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில் மூலக்கொல்லை பகுதியைச் சேர்ந்த இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.