வேலூர்: ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா பறிமுதல்

68பார்த்தது
டாட்டா நகரில் இருந்து எர்ணாகுளம் வரை செல்லும் பயணிகள் விரைவு ரயில் காட்பாடி அருகே வரும்போது காட்பாடி ரயில்வே காவல் துறையின் சிறப்பு குழுவினர் ரயிலில் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த இரண்டு டிராவல் பைகளை ஆய்வு செய்த போது அதில் 24 பண்டல்களில் சுமார் 25 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை பறிமுதல் செய்து காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இது குறித்து ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி