*நாட்றம்பள்ளி அருகே லாரியின் முன் டயர் வெடித்ததில் தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த ராட்சத கிரானைட் கற்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்*
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் இரண்டு லாரிகளை வைத்து கிரானைட் கற்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவரிடம் பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் மகாலிங்கம்( 42) என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்
இந்த நிலையில் ஜெகதேவியில் இருந்து லாரியில் நான்கு ராட்சத கிரேனட் கற்களை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் மகாலிங்கம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதி வழியாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது லாரியின் முன் டயர் வெடித்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறி கேட்டு ஓடியது. இதனால் சாலையில் உள்ள தடுப்புச் சுவற்றின் மீது மோதி லாரி சர்வீஸ் சாலைக்கு அருகே உள்ள பள்ளத்தில் விழுந்தது இதில் ஒரு ராட்சதக்கல் தேசிய நெடுஞ்சாலையிலும் மற்ற மூன்று ராட்சத கற்கள் அருகில் உள்ள நிலத்திலும் விழுந்து விபத்துக்குள்ளானது.