கேவி குப்பம் - Kevi Kuppam

ஆம்பூர்: மினி லாரி மோதி கட்டிட தொழிலாளி பலி

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவர் மீது பின்னால் வந்த மினி லாரி அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானதில் கட்டிடத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னகொம்மேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி இவர் கட்டிடப் பணியில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கட்டிடப் பணிக்காக இன்று இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் ஆம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கன்னிகாபுரம் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் சென்னை-பெங்களூர் தேசியநெடுஞ்சாலையில் முன்னால் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் அதிவேகமாக வந்த மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூர்த்தி சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் நகரக் காவல்துறையினர் மூர்த்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து ஏற்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மினி லாரி ஓட்டுநரைத் தேடிவருகின்றனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా