காட்பாடி - Katpadi

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆட்சியரின் செயல்!

வாரந்தோறும் திங்கட்கிழமை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெறுவது வழக்கம். அந்த விதத்தில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக வழங்கினர். அந்த விதத்தில் திங்கட்கிழமையான நேற்று (செப் 30) மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வருகின்ற போது, வரும் வழியில் அங்கங்கே இருந்த பொதுமக்களிடையே தானாக சென்று நலம் விசாரித்து அவர்கள் கொண்டு வந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டு செல்கின்ற காட்சி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அதேபோல், மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டு பொது மக்களிடையே மனுக்களை பெற்று விசாரித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு மூதாட்டி வந்து, "மனு கொடுத்திருக்கிறேன். பஸ்சுக்கு நேரமாச்சு நான் போகிறேன்" என்று சொல்ல மாவட்ட ஆட்சியர் அருகே இருந்த அலுவலரை அழைத்து, "அம்மாவுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து அனுப்புங்க. சாப்பிட்டு தான் போகணும் சரியா" என மூதாட்டியிடம் ஆட்சியர் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా