டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி, லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் பாபர் அசாம் கேப்டன்ஷிப் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் டி20, ஒருநாள் அணிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை கடந்த மாதமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் கூறிவிட்டேன். கேப்டன் பதவி பணிச்சுமையை ஏற்படுத்தியது” எனக் கூறியுள்ளார்.