ஜெயிலர் உள்ளிட்ட 4 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

65பார்த்தது
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் என்பவரை வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலஷ்மி தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாகவும், அப்போது வீட்டில் இருந்த பொருள்களை திருடியதாக சிவக்குமார் சிறையில் துன்புறுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் வேலூர் சிறைத்துறை டி. ஐ. ஜி ராஜலட்சுமி, வேலூர் மத்தியசிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 10ம் தேதி சேலம் மத்திய சிறையில் உள்ள சிவக்குமாரிடமும், 11ம் தேதி வேலூர் மத்திய சிறையிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 14 பேரில்
14 பேரில். 3வது நபர் ஜெயிலர் அருள்குமரன், 4வது நபர் டிஐஜியின் தனி பாதுகாப்பு அதிகாரி ராஜி, 7வது நபர் சிறப்பு குழுவை சேர்ந்த பிரசாந்த் மற்றும் 10வது நபர் சிறப்பு குழுவைச் சேர்ந்த விஜி ஆகிய நான்கு பேருக்கு நாளை (திங்கள்கிழமை) சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் வழங்கி உள்ளது.

ஒரே நேரத்தில் அனைவருக்கும் சம்மன் வழங்கி விசாரிக்க இயலாது என்பதால் முதற்கட்டமாக நான்கு பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தடுத்து மீதமுள்ளவர்களுக்கும் சமன் வழங்கி சிபிசி விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி