திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று செப்டம்பர் 27 வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடத்தப்பட்டு, விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.