ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் குறும்பேறி பகுதியை சேர்ந்த ராமு என்ற நபர் மனு ஒன்றை அளித்தார். அதில் கந்திலி ஒன்றியம் குறும்பேறி ஊராட்சிக்குட்பட்ட ஓட்டேரி மற்றும் ஓட்டனேரி ஆகிய ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் செய்து விவசாயம் செய்து வரும் நபர்களை அப்புறப்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.