சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்தில் இருந்து திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 280 பயணிகளுடன் இரவு 9.40 மணிக்கு துபாய் புறப்படவிருந்த எமிரேட்ஸ் விமானத்தில் புகை வந்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். புகையை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோளாறு சரிசெய்யப்பட்ட பின் விமானம் இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.