மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நீதி கேட்டு பல போராட்டங்கள் பல இடங்களில் நடந்து வரும் நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், 100-க்கும் மேற்பட்டோர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெழுகுவத்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.