பஞ்சாப்பில் மாரடைப்பால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அடக்கம்

71பார்த்தது
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அடுத்த ஆற்காட்டன் குடிசை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் இந்திய ராணுவத்தில் பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த 26-ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து இராணுவ வீரர் ராஜேஷ் உடல் சொந்த ஊரான ஆர்காட்டன் குடிசை கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இவரது உடலுக்கு ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சென்னையை சேர்ந்த ராணுவ வீரர்கள் குழுவினர் இராணுவ வீரர் ராஜேஷின் உடலுக்கு மலர் வளையம் வைத்தும், தேசிய கொடி போத்தியும் மரியாதை செய்தனர். பின்னர் தேசிய கொடி அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து ராணுவ வீரர் ராஜேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி