வேலூர் மாவட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து சின்னசேக்கனூர், தெள்ளூர், ஜமால்புரம், ஊசூர், புலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஊசூரில் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கூறுகையில், "வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், டெங்கு காய்ச்சலுக்கென்று அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 தனிப்படுகை வசதிகள் தாயார் நிலையில் உள்ளதாகவும், வேலூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 69-பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்தார்.