போளூர் - Polur

திருவண்ணாமலை: ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை: ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, எடப்பிறை கிராமத்தில் எழுந்தருளிலுள்ள ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை மஹா கணபதி பூஜை, புண்ணியாகவாஜனம், நான்காம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி, நாடி சந்தனம், யாத்ராதானம், தனபூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்து ஹோமங்கள் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.  பின்னர் சித்தி விநாயகர் சன்னதியின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது இதனையடுத்து விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திருநீறு உள்ளிட்ட பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாரதனைநடந்தது. இந்த விழாவில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் திருவிழாவில், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி நேரில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
தி.,மலை: புதிய கட்டிடங்களை ஆய்வு செய்த மேயர்
Nov 09, 2024, 13:11 IST/செய்யாறு
செய்யாறு

தி.,மலை: புதிய கட்டிடங்களை ஆய்வு செய்த மேயர்

Nov 09, 2024, 13:11 IST
திருவண்ணாமலை தேரடி தெருவில் இப்போது பூ சந்தை இயங்கி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் உள்ள இந்த சந்தைக்கு புதிய இடம் தோ்வு செய்யப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை, காந்தி நகா் நெடுஞ்சாலைப் பகுதியில் ரூ. 30 கோடி மதிப்பில் காய்கறி, பூ சந்தை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணியை திருவண்ணாமலை மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளா் காந்திராஜன், திருவண்ணாமலை நகர திமுக செயலா் பா. காா்த்திவேல்மாறன், நகா்மன்ற உறுப்பினா் காயத்ரி கிருஷ்ணகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.