மதுபான கடை அகற்றக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

61பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த
பெரிய கொழப்பலூரில் பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் பனையம்மன் கோயில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் வெள்ளை பள்ளி, ஊராட்சி அலுவலகம், பஜார் வீதி மத்தியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இதனால் பஜார் வீதியில் அடிக்கடி குடிமகன்களால் தகராறு , விபத்துக்கள் என நடைபெற்று வருகிறது.

இதனால் உள்ளூர், வெளியூர் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், ஆன்மீகவாதிகள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். உடனடியாக ஊரின் மத்தியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை அகற்றக்கோரி ஊராட்சி மன்றத்தில் கிராம சபா கூட்டத்தில் நான்கு முறை தீர்மானம் நிறைவேற்றியும் டாஸ்மார்க் பொதுமலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை இந்நாள் வரையில் எடுக்கவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருவதால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வேலாயுதம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு மதுபான கடையை அகற்ற கோரி நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செய்யாறு காவல்துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் உள்பட திரளான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி