திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜமுனாமரத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் ஆட்டோ நிறுத்தத்தில் நேற்று ஆயுத பூஜை விழா ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் கார்த்திக் தேவராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு தலைவர் ஜீவாமூர்த்தி, கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன், அதிமுக ஒன்றிய செயலாளர் வெள்ளையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.