திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள ஜமுனாரத்தூருக்கு தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக குடும்பம் குடும்பமாக சுற்றுலா பயணிகள் போளூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வாணியம்பாடி, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்து அங்குள்ள பீமன் நீர்வீழ்ச்சி மற்றும் கோலப்பன் ஏரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர் மேலும் பீமன் நீர்வீழ்ச்சியில் குளித்தும், கோலப்பன் ஏரியில் படகு சவாரி மேற்கொண்டும் தீபாவளி விடுமுறை தினத்தை சுற்றுலா பயணிகள் கொண்டாடி மகிழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.