திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த எட்டிவாடி ரயில்வே கேட் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிக்காக வருகிற நவம்பர் மாதம் 11ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
அதன்படி போளூரில் இருந்து வேலூருக்கும் வேலூரில் இருந்து போளூருக்கும் செல்கிற வாகனங்கள் கேளூர் பகுதியில் தொடங்கி வடமாதிமங்கலம் சாலை வழியாகச் சென்று அதன் பின் ஆரணி எட்டிவாடி சாலை வழியாக பயணித்து போளூரை அடையலாம்
வடமாதிமங்கலம் சாலை மற்றும் எட்டிவாடி சாலையை மாற்று பாதையாக போக்குவரத்திற்க்கு பயன்படுத்திக்கொள்ள திருவண்ணாமலை ஆட்சியாளர் திரு. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.